கால்பந்து

ரத்ததானம் செய்த இந்திய கால்பந்து வீரர் + "||" + Blood donated Indian footballer

ரத்ததானம் செய்த இந்திய கால்பந்து வீரர்

ரத்ததானம் செய்த இந்திய கால்பந்து வீரர்
ரத்த வங்கிகளில் போதிய ரத்தம் இருப்பு இல்லாததால் ரத்ததானம் தந்து உதவும்படி சில ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் அழைப்பு விடுத்ததையடுத்து இந்திய கால்பந்து அணி வீரர் ஜெஜெ லால்பெகுலா ரத்ததானம் செய்தார்.
அய்ஜால், 

இந்திய கால்பந்து அணியின் முன்னணி வீரர் ஜெஜெ லால்பெகுலா. ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி. அணிக்காக ஆடுகிறார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் ரத்த வங்கிகளில் போதிய ரத்தம் இருப்பு இல்லாததால் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், அதனால் ரத்ததானம் தந்து உதவும்படி மிஜோ இளைஞர் அமைப்புக்கு சில ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் அழைப்பு விடுத்த தகவல் லால்பெகுலாவுக்கு தெரியவந்தது. 

உடனடியாக அவர் மிசோரம் மாநிலம் டர்ட்லாங்கில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்த தானம் செய்தார். அவர் மட்டுமின்றி மேலும் 32 பேர் ரத்ததானம் செய்ய முன்வந்தனர். அவர்களில் தகுதியான 27 பேரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டது. அந்த ஆஸ்பத்திரிக்கு மீண்டும் ரத்தம் தேவைப்பட்டால் தாங்கள் உதவிகரம் நீட்டுவதற்கு தயாராக இருப்பதாக 29 வயதான லால்பெகுலா தெரிவித்தார்.