கால்பந்து

பிரபல கால்பந்து வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு + "||" + Norman Hunter: Leeds United legend dies after contracting coronavirus

பிரபல கால்பந்து வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு

பிரபல கால்பந்து வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு
பிரபல கால்பந்து வீரர் நார்மன் ஹன்டர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிந்தார்.
லண்டன்,

உயிரை பறிக்கும் கொடிய கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இந்த நோய் விளையாட்டு வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. 

இந்தநிலையில்  1966-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் மகுடம் சூடிய இங்கிலாந்து அணியில் அங்கம் வகித்த நார்மன் ஹன்டர், கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று மரணம் அடைந்தார். 

அவருக்கு வயது 76. இங்கிலாந்து அணிக்காக 28 ஆட்டங்களில் ஆடி 2 கோல் அடித்துள்ளார். லீட்ஸ் யுனைடெட் கிளப்புக்காக 14 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவரது மறைவிற்கு பல்வேறு விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.