ஐ.லீக் கால்பந்தில் எஞ்சிய ஆட்டங்கள் ரத்து: மோகன் பகான் அணி சாம்பியன்


ஐ.லீக் கால்பந்தில் எஞ்சிய ஆட்டங்கள் ரத்து: மோகன் பகான் அணி சாம்பியன்
x
தினத்தந்தி 18 April 2020 10:15 PM GMT (Updated: 18 April 2020 7:27 PM GMT)

ஐ.லீக் கால்பந்தில் எஞ்சிய ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, மோகன் பகான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கொல்கத்தா,

இந்த ஆண்டுக்கான ஐ.லீக் கால்பந்து போட்டியில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்றன. இன்னும் 28 லீக் ஆட்டங்கள் எஞ்சி உள்ள நிலையில் அதற்குள் கொரோனா அரக்கன் ஊடுருவி விட்டதால் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து நிலைமை மோசமாக இருப்பதால் இந்த சீசனுக்கான எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்த மோகன் பகான் அணி (16 ஆட்டத்தில், 12 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன், 39 புள்ளி) ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்த நிலையில், அந்த பட்டத்தை கைப்பற்றியதாக அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.லீக் கமிட்டி, இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக கமிட்டியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Next Story