கால்பந்து

கொரோனா வைரசால் 22 வயது ரஷ்யக் கால்பந்து வீரர் உயிரிழப்பு! + "||" + russian footballer dies during training session amid coronavirus lockdown

கொரோனா வைரசால் 22 வயது ரஷ்யக் கால்பந்து வீரர் உயிரிழப்பு!

கொரோனா வைரசால் 22 வயது ரஷ்யக் கால்பந்து வீரர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 22 வயது ரஷ்யக் கால்பந்து வீரர் உயிரிழந்தார்.
மாஸ்கோ,

உயிரை பறிக்கும் கொடிய கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இந்த நோய் விளையாட்டு வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் விளையாட்டு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சமோக்வாலோவ் ஒரு தனிப்பட்ட பயிற்சியைச் செய்து கொண்டிருந்தார், அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி நேற்று (20ம் தேதி) கசங்கா டிஃபெண்டர் 
இன்னோகென்டி சமோக்வலோவ் உயிரிழந்தார்.

தனிப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு உடல்நலத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் பயிற்சி பெறும் கிளப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. மேலும் சமோக்வலோவின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பயிற்சி கிளப் இரங்கல் தெரிவித்துள்ளது.