பிரான்சில் கால்பந்து போட்டி ரத்து


பிரான்சில் கால்பந்து போட்டி ரத்து
x
தினத்தந்தி 29 April 2020 7:03 AM GMT (Updated: 29 April 2020 7:03 AM GMT)

கொரோனா அச்சம் காரணமாக பிரான்சில் முதன்மை கால்பந்து தொடரான லீக்-1 முடிவுக்கு வருகிறது.

பாரீஸ்,

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா அச்சம் எதிரொலியாக பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மற்றும் யூரோ கால்பந்து போட்டி ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்தநிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் கொரோனா தொற்றால் இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர். 45 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் செப்டம்பர் 1-ந்தேதி வரை பிரான்ஸ் நாட்டில் விளையாட்டு உள்பட எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாது என பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார். இதனால் பிரான்ஸின் முதன்மை கால்பந்து தொடரான லீக்-1 முடிவுக்கு வருகிறது. 

ஏற்கனவே பெல்ஜியம் முதன்முதலாக கால்பந்து லீக் ரத்து செய்தது. அதனைத்தொடர்ந்து தற்போது பிரான்ஸ் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story