கால்பந்து

கால்பந்து வீரர் பவுலோ டைபாலாவிற்கு மீண்டும் கொரோனா பாதிப்பு + "||" + Paulo Dybala tests coronavirus positive for fourth time

கால்பந்து வீரர் பவுலோ டைபாலாவிற்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

கால்பந்து வீரர் பவுலோ டைபாலாவிற்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் பவுலோ டைபாலா மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ரோம்,

சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த கொடிய வைரஸால் இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியாவில் இதுவரை 31,300 பேருக்கு மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அர்ஜெண்டினா கால்பந்து வீரர் பவுலோ டைபாலாவிற்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த ஆறு வாரங்களில் கொரோனா வைரஸுக்காக நடத்திய பரிசோதனைகளில் நான்கு முறை பாஸிடிவ் முடிவு கிடைத்துள்ளது என்றும், கடந்த மார்ச் மாதம் தனக்கும் காதலிக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக பவுலோ டைபாலா தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் ‘செரி ஏ’ கால்பந்து லீக் அணியான யுவென்டஸ்க்காக விளையாடி வருபவர் அர்ஜென்டினாவின் இளம் வீரர் பவுலோ டைபாலா என்பது குறிப்பிடத்தக்கது.