கால்பந்து

‘நான் குணமாகிவிட்டேன்’ கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் பவுலா டைபாலா! + "||" + ‘I am healed’: Paulo Dybala confirms his Covid-19 recovery

‘நான் குணமாகிவிட்டேன்’ கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் பவுலா டைபாலா!

‘நான் குணமாகிவிட்டேன்’ கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தார் பவுலா டைபாலா!
பிரபல கால்பந்து வீரர் பவுலா டைபாலா கொரோனா பதிப்பிலிருந்து குணமடைந்தார்.
அர்ஜென்டீனா,

கொரோனா வைரஸ் இத்தாலி நாட்டையே நிலை குலைய செய்துவிட்டது. இந்த கொரோனா அரக்கன் கால்பந்து வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. இத்தாலியில் புகழ்பெற்ற யுவென்டஸ் கால்பந்து கிளப் அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினாவை சேர்ந்த முன்கள வீரர் பவுலா டைபாலா கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்டார். 

இந்நிலையில் மார்ச் 21ல் கொரோனா உறுதி செய்யப்பட்ட நட்சத்திர வீரர் டைபாலா 3வது வீரராகக் குணம் அடைந்துள்ளதாக ஜுவென்டஸ் அறிவித்துள்ளது. அதனை டை பாலாவும் சமூக ஊடகங்கள் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார். 

இத்தாலியில் விளையாட்டு வீரர்கள் தனித்தனியே பயிற்சி பெற மே 4ம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 18ம் தேதி முதல் குழுவாகவும் பயிற்சி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் பிரபல கால்பந்து கிளப்பான ஜுவென்டஸ் வீரர்கள் 4 பேர், மார்ச் மாதம் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.