கால்பந்து

யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஒத்தி வைப்பு + "||" + FIFA U-17 Women’s World Cup in India postponed to February 2021

யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஒத்தி வைப்பு

யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ஒத்தி வைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2021க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் தாக்குதலில் இருந்து விளையாட்டு உலகமும் தப்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு எந்த சர்வதேச போட்டிகளும் இல்லை என்ற நிலைமை உருவாகி விட்டது. 

இந்தநிலையில்,  இந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவில் நடைபெற இருந்த எப்ஐஎப்ஏ  யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021 -ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் என்றும், இந்த விளையாட்டு போட்டி பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கால்பந்து நிர்வாக குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன.   யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கும் என்று கூறப்படுகிறது.