மருத்துவமனைகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கிய கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி


மருத்துவமனைகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கிய கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி
x
தினத்தந்தி 13 May 2020 12:18 PM GMT (Updated: 13 May 2020 12:18 PM GMT)

கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி மருத்துவமனைகளுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.

நியூயார்க்,

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது கொரோனாவால் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லியோனல் மெஸ்ஸி ஏற்கனவே கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பண உதவி வழங்கி உள்ளார்.

தென்அமெரிக்கா நாடான அர்ஜென்டினாவிலும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகள் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் வாங்கும் வகையில்  லியோனல் மெஸ்ஸி, 4 கோடி ரூபாய் (5.4 லட்சம் டாலர்) நிதியுதவி வழங்கியுள்ளார். பார்சிலோனா அணி வழங்கும் சம்பளத்தில் 70 சதவீதத்தை விட்டுக்கொடுக்க தயார் என தெரிவித்துள்ளார்.

Next Story