கால்பந்து

கண்களை மூடிக்கொண்டு ஸ்கிப்பிங் செய்து கால்பந்து விளையாடும் சிறுவன்! + "||" + Blindfolded Kid Does Kick-Ups While Skipping In Amazing Video

கண்களை மூடிக்கொண்டு ஸ்கிப்பிங் செய்து கால்பந்து விளையாடும் சிறுவன்!

கண்களை மூடிக்கொண்டு ஸ்கிப்பிங் செய்து கால்பந்து விளையாடும் சிறுவன்!
சிறுவன் ஒருவன் கண்களை மூடிக்கொண்டு ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டு கால்பந்துடன் விளையாடும் வீடியோவை ஏஎப்சி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் மற்ற விளையாட்டு நிகழ்வுகளைப் போலவே கால்பந்தையும் பாதித்துள்ளது. யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக், பிரீமியர் லீக், பன்டெஸ்லிகா மற்றும் லா லிகா போன்ற முக்கிய நிகழ்வுகள் கொடிய வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு (ஏஎப்சி), தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிறுவன் அற்புதமாகக் கண்களைமூடிக் கொண்டு, ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டும் கால்பந்துடன் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்து கொண்டது. அந்த 24 விநாடி வீடியோவில், சிறுவன் ஸ்கிப்பிங் விளையாடியபடியே கால்பந்தை உதைத்துக்கொண்டிருகிறான். 

இந்த வீடியோவில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுவன் கண்மூடிக் கொண்டு செய்தது தான். சிறுவனின் திறமையை கண்டு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.