நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்பெயின் கால்பந்து அணிகள் பயிற்சியில் ஈடுபட்டன


நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்பெயின் கால்பந்து அணிகள் பயிற்சியில் ஈடுபட்டன
x
தினத்தந்தி 18 May 2020 6:46 AM GMT (Updated: 18 May 2020 6:51 AM GMT)

கொரோனா பாதிப்பால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்பெயின் கால்பந்து அணிகள் திரும்ப பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.

பார்சிலோனா

கொரோனா தொற்றுநோய் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்பெயின் கால்பந்து அணிகள் திரும்ப பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. லா லிகா கிளப் தலைவர் ஜேவியர் டெபாஸ் முதல் இரண்டு பிரிவுகளில் உள்ள கிளப்புகள் திங்கள்கிழமை முதல் 10 வீரர்கள் வரை குழுக்களில் பயிற்சியைத் தொடங்குவார்கள் என உறுதி செய்து உள்ளார்.

 சனிக்கிழமையன்று அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து விளையாட்டு அணிகள் தங்கள் சொந்த பிராந்தியத்தில் ஊரடங்கு நிலைமையைப் பொருட்படுத்தாமல் பயிற்சிக்கு திரும்ப அனுமதிக்கிறது.

குழு பயிற்சி திரும்புவதை உறுதிப்படுத்துவது பயிற்சியின் தரநிலையை உயர்த்த உதவும்" என்று டெபாஸ் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயின் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது அனைத்து அணிகளும் ஒரே மட்டத்தில் பயிற்சி பெறுவது மிகவும் முக்கியம், இப்போது நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஸ்பெயினில் ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்து கால்பந்து அணி பயிற்சிகளும் மார்ச் 12 முதல் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த பருவத்தை முடிக்க அனுமதிக்காவிட்டால் கிளப்புகள் ஒரு பில்லியன் யூரோக்களை இழக்க நேரிடும் என்று டெபாஸ் எச்சரித்து உள்ளார்.

ஜூன் 12 முதல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் என்று தான் நம்புகிறேன் என்று டெபாஸ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்த மாத தொடக்கத்தில் கிளப்புகள் தனிப்பட்ட பயிற்சியைத் தொடங்கின, அடுத்த கட்டமாக அவர்கள் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளைத் தொடங்குவதற்கு முன் முழு பயிற்சிக்குச் செல்வார்கள், இது முதலில் சுகாதாரத்துக்கான அரசாங்கத் துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

Next Story