கொரோனா பாதிப்பு: பாலியல் பொம்மைகள் முன் நடத்தபட்ட கால்பந்து போட்டி


கொரோனா பாதிப்பு: பாலியல் பொம்மைகள் முன் நடத்தபட்ட  கால்பந்து போட்டி
x
தினத்தந்தி 18 May 2020 9:24 AM GMT (Updated: 18 May 2020 9:24 AM GMT)

கொரோனா பாதிப்பால் தென் கொரியாவில் பாலியல் பொம்மைகள் முன் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.

சியோல்

தென்கொரியாவில், கால்பந்து போட்டிகள் துங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் பாலியல் பொம்மைகள் இருக்கையில் அமர வைத்துவிட்டு போட்டி நடத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தென்கொரியாவின் கால்பந்து போட்டியான கே-லீக் போட்டி கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது நடத்தப்பட்ட இந்த போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே இருக்கைகள் பாலியல் பொம்மைகளை கொண்டு நிரம்பப்பட்டிருந்தது.

இதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தன.எனவே, கால்பந்து போட்டிக்குழு இதற்கு வருத்ததுடன், மன்னிப்பும் கோரியுள்ளது. அதில் “இந்த பொம்மைகள் ரசிகர்கள் இல்லாததால் பாலியல் பொம்மை தாயரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது அவமான ஒன்றுதான்”என்று தெரிவித்துள்ளது.


Next Story