கால்பந்து

பிரீமியர் லீக் கால்பந்து வீரர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா + "||" + Two more Coronavirus test positive from Premier League

பிரீமியர் லீக் கால்பந்து வீரர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா

பிரீமியர் லீக் கால்பந்து வீரர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா
பிரீமியர் லீக் கால்பந்து வீரர்களில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
லண்டன், 

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடும் 20 அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. 

முன்னதாக மே 17ம் தேதி தொடங்கிய முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் விளையாடும் 748 வீரர்களின் மாதிரியில் மூன்று வெவ்வேறு கிளப்புகளைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. அதனால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை கடந்த 3 நாட்களாக 996 பேருக்கு நடத்தப்பட்டது. அதில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட 1744 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.