இங்கிலாந்து பிரீமியர் லீக் வீரர்கள் மேலும் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு;


இங்கிலாந்து பிரீமியர் லீக் வீரர்கள் மேலும் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு;
x
தினத்தந்தி 28 May 2020 11:34 AM GMT (Updated: 28 May 2020 11:34 AM GMT)

இங்கிலாந்து பிரீமியர் லீக் வீரர்கள் மேலும் 4 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்து உள்ளது.

லண்டன்

முழு உலகத்தையும் தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கு மூன்று வெவ்வேறு கிளப்புகளைச் சேர்ந்த மேலும் நான்கு கொரோனாவால் பாதிக்கபட்டு உள்ளனர் என இங்கிலாந்து  பிரீமியர் லீக் (ஈபிஎல்) உறுதிப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் உயர்மட்ட கால்பந்து லீக் சமீபத்திய சுற்று சோதனையில் மொத்தம் 1,008 வீரர்கள் மற்றும் கிளப் ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பிரீமியர் லீக்கில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 12 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கிய பின்னர் ஜூன் மாதத்தில் போட்டி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க இங்கிலாந்து  பிரீமியர் லீக்  திட்டமிட்டுள்ளது.

Next Story