கால்பந்து

மைதானம் அருகே நிர்வாணமாக நடமாடிய மாடல் அழகிக்கு முககவசம் அணியாததற்கு அபராதம் + "||" + Model poses na..d in front of stadium – but faces fine for not wearing a mask

மைதானம் அருகே நிர்வாணமாக நடமாடிய மாடல் அழகிக்கு முககவசம் அணியாததற்கு அபராதம்

மைதானம் அருகே நிர்வாணமாக நடமாடிய மாடல் அழகிக்கு முககவசம் அணியாததற்கு அபராதம்
கால்பந்து மைதானம் அருகே நிர்வாணமாக நடமாடிய மாடல் அழகிக்கு முககவசம் அணியாததற்கு அபராதம் விதிக்கபட்டது.
மாஸ்கோ

மே 12 அன்று, தென்மேற்கு ரஷ்யாவின் ராஸ்னோடர் உட்பட ரஷ்யாவில் பல பகுதிகளில்  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

கிராஸ்னோடரில் உள்ள கிராஸ்னோடர் கால்பந்து மைதானத்திற்கு வெளியே ஈவா மரியா என்ற மாடல் அழகி தனது பிறந்தநாள் விழாவுக்காக நிர்வாணமாக வீடியோ ஒன்றை எடுத்துள்ளார்.

மாடல் அழகி உடலில் ஒட்டு துணியும் இல்லாமல் கால்பந்தை பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார் அந்த வீடியோ வைரலாகியது . இது குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  போலீசார் அவருக்கு முககவசம் அணியாததால் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்டியோம் கொனோவலென்கோ கூறுகையில், இந்த மாடல் அழகி முககவசம் அணியாததால் அவருக்கு 347 டாலர் அபராதம் விதிக்கப்படலாம் என கூறினார்.

கொனோவலென்கோ ஈவா தனது நிர்வாணமாக நடனாடியதற்கு  தண்டனையை அனுபவிக்க முடியுமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

மாடல் அழகி ஈவா மரியா கூறியதாவது:-

தனது உடலை ஒரு கலை வடிவமாக கருதுவதால் அழகு உணர்வு தன்னை அரங்கத்திற்கு  நிர்வாணமாக கொண்டு வந்தது. உண்மையாக இது பரபரப்பை ஏற்படுத்தும் கருதவில்லை. “நான் இப்போது ஐந்து ஆண்டுகளாக இதேபோன்ற போட்டோஷூட்களைச் செய்து வருகிறேன், நகரத்தை சுற்றி நிர்வாணமாக நடந்துகொள்வது எனக்கு ஒரு விஷயமல்ல என்று கூறினார்.