கால்பந்து

இந்தியாவில் உள்ளூர் கால்பந்து போட்டி சீசன் ஆகஸ்டு 1-ந்தேதி தொடக்கம் + "||" + Indian football domestic season to begin on August 1

இந்தியாவில் உள்ளூர் கால்பந்து போட்டி சீசன் ஆகஸ்டு 1-ந்தேதி தொடக்கம்

இந்தியாவில் உள்ளூர் கால்பந்து போட்டி சீசன் ஆகஸ்டு 1-ந்தேதி தொடக்கம்
இந்தியாவில் உள்ளூர் கால்பந்து போட்டி சீசன் ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் உள்ளூர் கால்பந்து போட்டி சீசன் ஆகஸ்டு 1-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* பந்தை பளபளப்பாக்க எச்சிலால் தேய்ப்பதற்கு தடை விதித்துள்ள ஐ.சி.சி. வியர்வையை பயன்படுத்தலாம் என்று கூறியிருக்கிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையில் விளையாடும் போது வியர்வை எப்படி வரும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கேள்வி எழுப்பியுள்ளார். ‘80 ஓவர்களுக்கு பிறகு புதிய பந்தை எடுப்பதற்கு பதிலாக 50 ஓவர்களுக்கு பிறகு புதிய பந்தை பயன்படுத்தலாம், பந்தை தேய்ப்பதற்கு மெழுகை குறிப்பிட்ட அளவு இன்னிங்சில் பயன்படுத்த அனுமதிக்கலாம்’ என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

* பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றுவது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று ஆலோசித்தனர். ஆனால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே ஆசிய கோப்பை போட்டியை நடத்த தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

* பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்துக்கு சென்று மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் யூனிஸ்கானும், சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் முஷ்டாக் அகமதுவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 16,752 பேருக்கு தொற்று; மேலும் 113 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க 50 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் ஆட்டங்கள் வெறிச்சோடிய மைதானத்தில் அரங்கேற இருப்பது குறிப்பிடத்தக்கது.
3. இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீடிப்பு
இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
4. இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 16,488 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியா-சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.