கால்பந்து

பன்டெஸ்லிகா கால்பந்து: பேயர்ன் முனிச் மீண்டும் ‘சாம்பியன்’ + "||" + Panteslika Football: Bayern Munich Re 'champion'

பன்டெஸ்லிகா கால்பந்து: பேயர்ன் முனிச் மீண்டும் ‘சாம்பியன்’

பன்டெஸ்லிகா கால்பந்து: பேயர்ன் முனிச் மீண்டும் ‘சாம்பியன்’
பன்டெஸ்லிகா கால்பந்து போட்டியில் பேயர்ன் முனிச் மீண்டும் சாம்பியன் ஆனது.
பன்டெஸ்லிகா கால்பந்து போட்டியில் பேயர்ன் முனிச் மீண்டும் சாம்பியன் ஆனது.

பெர்லின், 

18 கிளப் அணிகள் பங்கேற்றுள்ள பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெர்டர் அணியை தோற்கடித்தது. ராபர்ட் லெவான்டவ்ஸ்கி 43-வது நிமிடத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.

இதுவரை 32 ஆட்டங்களில் விளையாடி உள்ள பேயர்ன் முனிச் 24 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி என்று 76 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் இன்னும் 2 லீக் எஞ்சியுள்ள நிலையில் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் உறுதி செய்து விட்டது. போரசியா டார்ட்மன்ட் 66 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. பேயர்ன் முனிச் அணி இந்த பட்டத்தை வெல்வது இது 30-வது முறையாகும். கடைசி 8 சீசனில் அந்த அணியே தொடர்ச்சியாக வாகை சூடியிருப்பது நினைவு கூரத்தக்கது.