கால்பந்து

லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி ஏமாற்றம் + "||" + La Liga: Gerard Pique Pessimistic Over Barcelona Title Bid After Sevilla Draw

லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி ஏமாற்றம்

லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி ஏமாற்றம்
லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,

லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி, செவில்லா கிளப்பை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் (64 சதவீதம்) வைத்திருப்பதிலும், ஷாட்டுகள் அடிப்பதிலும் பார்சிலோனா அணி கணிசமாக ஆதிக்கம் செலுத்திய போதிலும் எதிரணியின் தடுப்பு அரணை கடைசி நிமிடம் வரை உடைக்க முடியாமல் ஏமாற்றத்திற்கு உள்ளானது.

பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி ‘பிரிகிக்’ வாய்ப்பில் அடித்த ஒரு ஷாட் கம்பத்திற்கு மேலாக பறந்தது. இதே போல் லுகாஸ் ஒகாம்போஸ் அடித்த பந்தும் கம்பத்தில் பட்டு மயிரிழையில் நழுவியது. இதனால் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. முன்னதாக முதல் பாதி ஆட்டம் நிறைவடையும் சமயத்தில் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் பனியனை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பார்சிலோனா இதுவரை 30 ஆட்டங்களில் விளையாடி 20 வெற்றி, 5 டிரா, 5 தோல்வி என்று 65 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. 29 ஆட்டங்களில் விளையாடி 62 புள்ளிகளுடன் உள்ள ரியல்மாட்ரிட் அணி அடுத்த லீக்கில் வெற்றி பெற்றால் பார்சிலோனாவை சமன் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பால்கால்பந்து உலகில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு-‘பிபா’ தகவல்
கொரோனா பாதிப்பால் கால்பந்து உலகில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என பிபா மதிப்பிட்டுள்ளது.
2. பொலிவியா கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனா பாதிப்பால் மரணம்
பொலிவியா கால்பந்து சம்மேளன தலைவர் சீசர் சலினாஸ் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளார்.
3. பிரிமீயர் லீக் கால்பந்து: 30 ஆண்டுக்கு பிறகு லிவர்பூல் அணி ‘சாம்பியன்’
பிரிமீயர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி பட்டம் வெல்வது 30 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.
4. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டி ஜெர்மனி அல்லது போர்ச்சுகலில் நடைபெறும்?
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து (சி.எல்) இறுதிப் போட்டி ஜெர்மனி அல்லது போர்ச்சுகலில் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
5. லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்
லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்; பாரவையாளர்கள் இல்லாமல்போட்டிகள் நடக்கும்