கால்பந்து

லா லிகா கால்பந்துபார்சிலோனா அணி மீண்டும் முன்னிலை + "||" + LaLiga table: 2019/20 latest standings today as Real Madrid retake top spot from Barcelona in title race

லா லிகா கால்பந்துபார்சிலோனா அணி மீண்டும் முன்னிலை

லா லிகா கால்பந்துபார்சிலோனா அணி மீண்டும் முன்னிலை
லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி மீண்டும் முன்னிலை பெற்றது.

பார்சிலோனா, 

லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனாவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான பார்சிலோனா கிளப் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிக் கிளப்பை வீழ்த்தியது. 71-வது நிமிடத்தில் பார்சிலோனா கேப்டன் லயோனல் மெஸ்சி கடத்தி கொடுத்த பந்தை மாற்று ஆட்டக்காரர் இவான் ராகிடிச் கோலாக்கினார். நேற்று தனது 33-வது பிறந்த நாளை கொண்டாடிய மெஸ்சிக்கு இந்த வெற்றி பிறந்தநாள் பரிசாக அமைந்தது.

31-வது ஆட்டத்தில் ஆடிய பார்சிலோனா 21 வெற்றி, 5 டிரா, 5 தோல்வியுடன் 68 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 30 ஆட்டத்தில் விளையாடி 19 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 65 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு இறங்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி ‘சாம்பியன்’
லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி ஒரு லீக் ஆட்டம் எஞ்சி இருக்கும் நிலையில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
2. லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணியின் அசத்தல் நீடிக்கிறது
லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்திலும் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.
3. லா லிகா கால்பந்து: சாம்பியன் பட்டத்தை நெருங்கியது, ரியல் மாட்ரிட்
லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கியது.
4. லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி அபார வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றது.
5. லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.