கால்பந்து

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி வெற்றி + "||" + La Liga: Vinicius, Ramos see off Mallorca as Real Madrid win again to claim top spot

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி வெற்றி

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி வெற்றி
ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.
மாட்ரிட், 

கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் மாட்ரிட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மல்லோர்கா கிளப்பை வீழ்த்தியது. ரியல் மாட்ரிட் தரப்பில் 19-வது நிமிடத்தில் லூகா மோட்ரிச் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் வின்சிஸ் ஜூனியர் கோலாக்கினார். 56-வது நிமிடத்தில் கேப்டன் செர்ஜியோ ரேமோஸ் ‘பிரிகிக்’ வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக கோல் அடித்தார்.

இந்த ஆட்டத்தில் 83-வது நிமிடத்தில் மல்லோர்கா அணியின் மாற்று ஆட்டக்காரராக 15 வயது பாலகனான லூகா ரோமிரோ களம் இறங்கி விளையாடினார். இதன் மூலம் லா லிகா போட்டியில் குறைந்த வயதில் களம் கண்ட வீரர் என்ற சரித்திரத்தை லூகா ரோமிரோ (15 வயது 219 நாட்கள்) தனதாக்கினார். இதற்கு முன்பு 1939-ம் ஆண்டில் ஸ்பெயின் வீரர் பிரான்சிஸ்கோ ரோட்ரிக்ஸ் 15 வயது 255 நாட்களில் செல்டா விகோ அணிக்காக ஆடியதே சாதனையாக இருந்தது. அந்த 81 ஆண்டு கால சாதனையை லூகா ரோமிரோ முறியடித்துள்ளார்.

31-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் 20 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 68 புள்ளிகள் பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்தது. நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணியும் இதே புள்ளிகளுடன் இருந்தாலும் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இவ்விரு அணிகளும் முதலிடத்தை மாறி, மாறி பிடித்து வருகின்றன.