ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒருங்கிணைந்த அணியின் இயக்குனர்களில் ஒருவராக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டு உள்ளார்.
கொல்கத்தா,
*ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பங்கேற்று வரும் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், பழமை வாய்ந்த மோகன் பகான் கிளப்பும் இணைந்து ஒருங்கிணைந்த அணியாக வரும் சீசனில் களம் காண உள்ளது. ஒருங்கிணைந்த அணியின் இயக்குனர்களில் ஒருவராக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டு உள்ளார். அணியின் புதிய பெயர், சீருடை, லோகோ ஆகியவை வருகிற 10-ந்தேதி இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்’ என்று அந்த அணியில் அங்கம் வகிக்கும் தமிழக வீரர் எட்வின் நம்பிக்கை தெரிவித்தார்.