கால்பந்து

பிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்: ரசிகர்கள், கால்பந்து வீரர்கள் இரங்கல் + "||" + 'He was larger than life': tributes pour in for football legend Jack Charlton

பிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்: ரசிகர்கள், கால்பந்து வீரர்கள் இரங்கல்

பிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்: ரசிகர்கள், கால்பந்து வீரர்கள் இரங்கல்
பிரபல கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார். அவரது மறைவிற்கு ரசிகர்கள், கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
லண்டன்,

1966-ல் கால்பந்து உலக சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியில் விளையாடிய ஜாக் சார்ல்டன் வயது 85. சமீபத்தில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜாக் அவர் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து இங்கிலாந்து கால்பந்து கிளப்பான லீட்ஸ் யுனைடெட் அணி தகவல் தெரிவித்துள்ளது.


1966 உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடினார் சார்ல்டன். இறுதிச்சுற்றில் 4-2 என மேற்கு ஜெர்மனியை இங்கிலாந்து தோற்கடித்து சாம்பியன் ஆனது. இதுவரை இங்கிலாந்து அணி வென்ற ஒரே கால்பந்து உலக சாம்பியன் பட்டம் அது மட்டும்தான்.

இங்கிலாந்து அணிக்காக 35 ஆட்டங்களில் விளையாடிய சார்ல்டன், 6 கோல்களை அடித்துள்ளார். ஆனால் லீட்ஸ் யுனைடெட் அணிக்காக 23 வருடங்கள் விளையாடி 773 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். மிகச்சிறந்த தடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட சார்ல்டன், 1972-73 சீஸனுடன் ஓய்வு பெற்றார். ஜாக் சார்ல்டன் மறைவுக்கு ரசிகர்களும் கால்பந்து வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.