கால்பந்து

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணியின் அசத்தல் நீடிக்கிறது + "||" + La Liga football: Real Madrid's oddity continues

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணியின் அசத்தல் நீடிக்கிறது

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணியின் அசத்தல் நீடிக்கிறது
லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்திலும் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.
கிரானடா,

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ரியல் மாட்ரிட், கிரானடா அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. அந்த அணியின் பெர்லான்ட் மென்டி 10-வது நிமிடத்திலும், கரிம் பென்ஜிமா 16-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்தினார்கள். இந்த சீசனில் பென்ஜிமா அடித்த 19-வது கோல் இதுவாகும். முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது.

பிற்பாதியில் ரியல் மாட்ரிட் அணியின் ஆட்டத்தில் லேசான தொய்வு ஏற்பட்டது. அதேநேரத்தில் பதில் கோல் திருப்ப கிரானடா அணியினர் தீவிர முனைப்பு காட்டினார்கள். இதன் பலனாக 50-வது நிமிடத்தில் கிரானடா வீரர் டார்வின் மாசிஸ் ஒரு கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். அத்துடன் கடைசி கட்டத்தில் கிரானடா வீரர்கள், ரியல் மாட்ரிட் அணியின் கோல் எல்லையை முற்றுகையிட்டு மேலும் கோல் அடிக்கும் முயற்சி மேற்கொண்டதுடன் கடும் நெருக்கடி அளித்தனர். அதனை ரியல் மாட்ரிட் அணியினர் துடிப்புடன் போராடி சமாளித்தனர்.

முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கிரானடா அணியை வீழ்த்தியது. கொரோனா பாதிப்பு காரணமாக போட்டியில் விழுந்த இடைவெளிக்கு பிறகு ரியல் மாட்ரிட் அணி தொடர்ச்சியாக சுவைத்த 9-வது வெற்றி இதுவாகும். 36-வது லீக் ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி 25 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 83 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 36 ஆட்டத்தில் விளையாடி (24 வெற்றி, 7 டிரா, 5 தோல்வி) 79 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இவ்விரு அணிகள் இடையே சாம்பியன் பட்டத்தை வெல்வதில் கடும் போட்டி நிலவினாலும், ரியல் மாட்ரிட் அணியின் கையே ஓங்கி நிற்கிறது. இன்னும் 2 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் ரியல் மாட்ரிட் அணி 4 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது. இந்திய நேரப்படி வருகிற 17-ந் தேதி அதிகாலை நடைபெறும் லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட், வில்லார் ரியல் அணியை சந்திக்கிறது. இதில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை தனதாக்கி விடும்.

தொடர்புடைய செய்திகள்

1. லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி அபார வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றிபெற்றது.
2. லா லிகா கால்பந்து: அட்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி
நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது
3. லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அசத்தல் வெற்றி
லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
4. லா லிகா கால்பந்து: மெஸ்சி கோலால் பார்சிலோனா அணி வெற்றி
பார்சிலோனாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா கிளப் அணி, லெவாண்டே அணியை எதிர்கொண்டது.