கால்பந்து

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona damage to former player of Indian football team

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரருக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரருக்கு கொரோனா பாதிப்பு
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

1960-ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய கால்பந்து அணியில் அங்கம் வகித்தவரும், ‘தயான்சந்த்’ விருது பெற்றவருமான 81 வயது சையத் ஷாகித் ஹாகிம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது அவர் ஐதராபாத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சையத் ஷாகித் ஹாகிம் கூறுகையில், ‘கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்காவுக்கு சென்று விட்டு திரும்பியதும் எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் 6 நாட்களுக்கு முன்னதாக பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. கடந்த 2 நாட்களாக எனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.