கால்பந்து

பொலிவியா கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனா பாதிப்பால் மரணம் + "||" + President Of Bolivian Football Federation Dies After Contracting COVID-19

பொலிவியா கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனா பாதிப்பால் மரணம்

பொலிவியா கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனா பாதிப்பால் மரணம்
பொலிவியா கால்பந்து சம்மேளன தலைவர் சீசர் சலினாஸ் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளார்.
  சுக்ரே

பொலிவிய கால்பந்து சம்மேளனத்தின் (எஃப்.பி.எஃப்) தலைவர் சீசர் சலினாஸ் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அவர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

58 வயதான சலினாஸ் 2018 முதல் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்

பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதி ஜீனைன் அனெஸ் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

பொலிவியா கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் சீசர் சலினாஸின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல். இந்த கடினமான காலங்களில் அவர்களுக்கு எனது ஆதரவு உண்டு" என்று கூறி உள்ளார்.
 
தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு (கான்மெபோல்) தனது இரங்கலில் "தென் அமெரிக்க கால்பந்து குடும்பம் சலினாஸின் மரணத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது" என கூறி உள்ளது.

பொலிவியா நாட்டில் 58,136 கொரோனா வைரஸ் பாதிப்புகளும்  2,106  இறப்புகளையும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனாவால் பாதிப்பு
சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கொரோனாவால் ஜியானி இன்பான்டினோ பாதிக்கப்பட்டு உள்ளார்.