கால்பந்து

லா லிகா கால்பந்து: கடைசி லீக் ஆட்டத்தில் டிரா கண்டது ரியல் மாட்ரிட் + "||" + Gareth Bale: Real Madrid star 'going nowhere', says agent Jonathan Barnett

லா லிகா கால்பந்து: கடைசி லீக் ஆட்டத்தில் டிரா கண்டது ரியல் மாட்ரிட்

லா லிகா கால்பந்து: கடைசி லீக் ஆட்டத்தில் டிரா கண்டது ரியல் மாட்ரிட்
20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்தது.
மாட்ரிட், -

20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் முந்தைய ஆட்டத்திலேயே சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கி விட்ட ரியல் மாட்ரிட், லெகானெஸ் அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ரியல் மாட்ரிட் அணியில் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் 9-வது நிமிடத்திலும், மார்கோ அசென்சியோ 52-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். லெகானெஸ் அணி தரப்பில் பிரையன் கில் 45-வது நிமிடத்திலும், ரோஜர் அஸ்சாலே 78-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினர். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட இடைவெளிக்கு பிறகு தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றியை ருசித்த ரியல் மாட்ரிட் அணியின் இடைவிடாத வெற்றிப்பயணத்துக்கு லெகானெஸ் அணி முடிவு கட்டியது. 34-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ரியல் மாட்ரிட் அணி 38 ஆட்டங்களில் விளையாடி 26 வெற்றி, 9 டிரா, 3 தோல்வியுடன் 87 புள்ளிகள் குவித்து முதலிடத்தை தனதாக்கியது. கடந்த முறை சாம்பியனான பார்சிலோனா அணி (38 ஆட்டங்களில் ஆடி 25 வெற்றி, 7 டிரா, 6 தோல்வி) 82 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.


இந்த போட்டி தொடரில் பார்சிலோனா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) 25 கோல்கள் அடித்து அசத்தி ‘தங்க ஷூவை’ தனதாக்கினார். அவர் லா லிகா போட்டியில் அதிக கோல் அடித்தவருக்கான தங்க ஷூவை கைப்பற்றி இருப்பது இது 7-வது முறையாகும். கடைசி ஆட்டத்திற்கு பிறகு ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஜிடேன் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த ஆட்டத்தில் நாங்கள் எங்களுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் நாங்கள் ஏற்கனவே படைத்த சாதனைகளை மறக்கக்கூடாது. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்றார்.