கால்பந்து

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மரணம் + "||" + Former India and Mohun Bagan footballer Manitombi Singh dies

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மரணம்

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மரணம்
இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மணிதோம்பி சிங் மரணமடைந்தார்.
கொல்கத்தா, 

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரரும், மோகன் பகான் கிளப்பின் முன்னாள் கேப்டனுமான மணிதோம்பி சிங் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 39. நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே உள்ள சொந்த ஊரில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு மனைவியும், 8 வயதில் மகனும் உள்ளனர்.

மணிதோம்பி சிங், 2002-ம் ஆண்டு பூசான் ஆசிய விளையாட்டில் இந்திய அணிக்காக பங்கேற்றுள்ளார். இதே ஆண்டில் வியட்னாமில் நடந்த எல்.ஜி. கோப்பையை வென்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக அங்கம் வகித்தார். அது இந்திய கால்பந்து அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றிய முதல் சர்வதேச கோப்பையாகும். அவரது மறைவுக்கு இந்திய கால்பந்து சம்மேளனமும், மோகன் பகான் கிளப்பும் இரங்கல் தெரிவித்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் இந்திய விமானப்படை முதல் பெண் அதிகாரி விஜயலட்சுமி மரணம்
பெங்களூருவில், இந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரி விஜயலட்சுமி மரணம் அடைந்தார்.
2. ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு ஆதெய்யா மரணம்
ஆஸ்கர் விருது பெற்ற பழம்பெரும் ஆடை வடிவமைப்பாளரான பானு ஆதெய்யா மரணம் அடைந்தார்.
3. எடப்பாடி பழனிசாமி தாயார் மரணம்: அமித்ஷா-நிர்மலா சீதாராமன் டெலிபோனில் பேசி ஆறுதல்; ஜனாதிபதி இரங்கல் செய்தி அனுப்பினார்
எடப்பாடி பழனிசாமி தாயார் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அமித்ஷா, நிர்மலா சீதாராமன் டெலிபோனில் ஆறுதல் தெரிவித்தனர்.
4. ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை மரணம்
ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை மார்க்ரெட் நோலன் காலமானார்.
5. மராத்தி நடிகர் அவினாஷ் கார்ஷிகர் மரணம்
மராத்தி நடிகர் அவினாஷ் கார்ஷிகர் மரணம்.