கால்பந்து

ஃபிஃபா மற்றும் ஆசியக் கோப்பைக்கான இந்திய கால்பந்து அணியின் கூட்டுத் தகுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு + "||" + Postponement of Indian football team qualifiers for FIFA and Asian Cup

ஃபிஃபா மற்றும் ஆசியக் கோப்பைக்கான இந்திய கால்பந்து அணியின் கூட்டுத் தகுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு

ஃபிஃபா மற்றும் ஆசியக் கோப்பைக்கான இந்திய கால்பந்து அணியின் கூட்டுத் தகுதிப் போட்டிகள் ஒத்திவைப்பு
ஃபிஃபா மற்றும் ஆசியக் கோப்பைக்கான இந்திய கால்பந்து அணியின் கூட்டுத் தகுதிப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மலேசியா,

2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை மற்றும் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய கால்பந்து அணியின் கூட்டுத் தகுதிப் போட்டிகள், இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த போட்டிகள் முதலில் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த தகுதிப் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பல நாடுகளில் தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் காரணமாக, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருந்த ஃபிஃபா உலகக் கோப்பை கத்தார் 2022 மற்றும் ஆசிய கோப்பை சீனா 2023 ஆகியவற்றுக்கான தகுதிப் போட்டிகள், ​​2021 ஆம் ஆண்டுக்கு மாற்றியமைக்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஃபிஃபா உலகக் கோப்பை 2022 மற்றும் ஆசிய கோப்பை 2023 ஆகியவற்றின் அடுத்த சுற்று தகுதிப் போட்டிகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.