கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனாவை பந்தாடியது பேயர்ன் முனிச் + "||" + Champions League football: Bayern Munich beat Barcelona

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனாவை பந்தாடியது பேயர்ன் முனிச்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனாவை பந்தாடியது பேயர்ன் முனிச்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பேயர்ன் முனிச் அணி பார்சிலோனாவை பந்தாடியது.
லிஸ்பன், 

கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனாவும் (ஸ்பெயின்), மானுவல் நீயர் தலைமையிலான பேயர்ன் முனிச்சும் (ஜெர்மனி) களத்தில் குதித்தன. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பேயர்ன் முனிச் அணி கோல்மழை பொழிந்தது. 4-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் வீரர் தாமஸ் முல்லர் கோல் அடித்து கணக்கை தொடங்கி வைத்தார். 

அதன் பிறகு இவான் பெரிசிச், செர்ஜ் ஞாப்ரி, ஜோஷூவா கிம்மிச், ராபர்ட் லெவான்டவ்ஸ்கி, பிலிப் காட்டினோ (2 கோல்) ஆகியோர் வரிசையாக கோல் அடித்தனர். தாமஸ் முல்லர் தனது பங்குக்கு மேலும் ஒரு கோல் திணித்தார். பேயர்ன் முனிச் வீரர்களின் தாக்குதல் பாணிக்கு முன் பார்சிலோனாவின் வியூகம் முற்றிலும் தவிடு பொடியானது. முடிவில் 5 முறை சாம்பியனான பேயர்ன் முனிச் அணி 8-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை துவம்சம் செய்து 12-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. படுதோல்வி காரணமாக பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளர் குயிக் சேட்டினின் பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. லா லிகா கால்பந்து: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி
ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது.