கால்பந்து

பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Corona infection confirmed for Brazilian footballer Neymar

பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலியா,

பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர், தற்போது பி.எஸ்.ஜி. எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த யு.இ.எப்.ஏ. சாம்பியன் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் பைரன் முனிச் கிளப் அணியிடம் பாரிஸ்-சாயின்ட் ஜெர்மைன் அணி தோல்வியடைந்தது.


இதற்கிடையில் அணி சார்பில் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் கொரோனா பாரிஸ்-சாயின்ட் ஜெர்மைன் அணியில் விளையாடிய நெய்மர், ஏஞ்சல் டிமரியா மற்றும் லியான்டிரோ ப்ரேடஸ் ஆகிய 3 வீரர்களுக்கும் கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் பி.எஸ்.ஜி. கிளப் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.எஸ்.ஜி. கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்துக் கொலை
பிரேசில் நாட்டில் கருப்பினத்தவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து பல்பொருள் அங்காடியில் வன்முறை வெடித்தது.
2. சீனா கொரோனா தடுப்பூசி சோதனை: கடுமையான பக்க விளைவு சோதனை நிறுத்தம்
பிரேசிலில் நடைபெற்று வந்த சீனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான பக்க விளைவு ஏற்பட்ட காரணத்தினால் தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
3. பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து: இரண்டு நோயாளிகள் உயிரிழப்பு
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
4. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 28,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 28,523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 998 ஆக அதிகரிப்பு
பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 998 ஆக அதிகரித்துள்ளது.