கால்பந்து

பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று + "||" + Neymar, PSG and Brazil star footballer, tests positive for Covid-19: Reports

பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று

பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசில்,

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரபலங்களும் விளையாட்டு வீரர்களும்  தப்பவில்லை. அந்த வகையில், கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர், தற்போது பி.எஸ்.ஜி. எனப்படும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த தகவல் பி.எஸ்.ஜி. கிளப் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பி.எஸ்.ஜி. கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் நாளை பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.