கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மேலும் ஒரு அணி + "||" + One more team in the ISL football tournament

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மேலும் ஒரு அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மேலும் ஒரு அணி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மேலும் ஒரு அணியை சேர்க்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசனுக்குரிய போட்டி ரசிகர்கள் இன்றி கோவாவில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த போட்டியில் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்று வரும் நிலையில் மேலும் ஒரு அணியை சேர்க்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.


இந்த அணி டெல்லி, லூதியானா, ஆமதாபாத், கொல்கத்தா, சிலிகுரி, போபால் ஆகிய நகரங்களில் ஒன்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. புதிய அணியை விரும்புவோர் வருகிற 14-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் என்று கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஈஸ்ட் பெங்கால் கிளப் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ‘சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்’ - தமிழக வீரர் எட்வின் நம்பிக்கை
‘ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்’ என்று அந்த அணியில் அங்கம் வகிக்கும் தமிழக வீரர் எட்வின் நம்பிக்கை தெரிவித்தார்.