கால்பந்து

பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாட மெஸ்சி முடிவு + "||" + Messi decides to continue playing for Barcelona

பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாட மெஸ்சி முடிவு

பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாட மெஸ்சி முடிவு
வெளியேறும் திட்டம் நிறைவேறாததால் பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாட மெஸ்சி முடிவு செய்துள்ளார்.
பார்சிலோனா,

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருகிறார். அவரது ஒப்பந்த காலம் 2021-ம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையில், கருத்துவேறுபாட்டால் பார்சிலோனா கிளப்பை விட்டு வெளியேற விரும்பினார்.


இலவச பரிமாற்றம் அடிப்படையில் விடுவிக்கும்படி பார்சிலோனா கிளப் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இப்போது அது சாத்தியம் இல்லை, ரூ.6 ஆயிரம் கோடி கட்டணமாக செலுத்தினால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் என்று பார்சிலோனா தரப்பில் சொல்லப்பட்டது. மெஸ்சியின் தந்தை நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் வேறுவழியின்றி மெஸ்சி மேலும் ஒரு சீசனில் (2020-21-ம் ஆண்டு) பார்சிலோனா கிளப்புக்காக விளையாட முடிவு செய்திருப்பதாக நேற்று வீடியோ பதிவின் மூலம் தெரிவித்தார். இதனால் பார்சிலோனா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.