பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சி முகாமில் மெஸ்சி பங்கேற்பு


பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சி முகாமில் மெஸ்சி பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Sep 2020 11:42 PM GMT (Updated: 7 Sep 2020 11:42 PM GMT)

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்சி நேற்று பார்சிலோனா கால்பந்து அணியின் பயிற்சியில் பங்கேற்றார்.


அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்சி பார்சிலோனா கிளப் அணியில் இருந்து இலவச பரிமாற்றத்தின் அடிப்படையில் வெளியேற விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்கு கிளப் நிர்வாகம் சம்மதிக்காததால் இழுபறி நீடித்த நிலையில் வரும் சீசனில் பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்தார். இந்த பிரச்சினை காரணமாக சில நாட்களாக பார்சிலோனா அணியின் பயிற்சி முகாமுக்கு செல்லாமல் இருந்த மெஸ்சி நேற்று பயிற்சியில் பங்கேற்றார்.

Next Story