கொரோனா பாதிப்பால்கால்பந்து உலகில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு-‘பிபா’ தகவல்


கொரோனா பாதிப்பால்கால்பந்து உலகில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு-‘பிபா’ தகவல்
x
தினத்தந்தி 16 Sep 2020 10:34 PM GMT (Updated: 16 Sep 2020 10:34 PM GMT)

கொரோனா பாதிப்பால் கால்பந்து உலகில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என பிபா மதிப்பிட்டுள்ளது.

நியூயார்க், 

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஏறக்குறைய 6 மாதங்கள் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகள் சீர்குலைந்து போயின. படிப்படியாக கால்பந்து போட்டிகள் தொடங்கப்பட்டாலும் ரசிகர்கள் இன்றியே நடத்தப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்த இழப்பு சர்வதேச கால்பந்து அமைப்பில் உறுப்பினராக உள்ள 211 நாடுகளுக்கு உட்பட்டது. பொதுவாக கிளப் போட்டிகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் புரளும். கொரோனா தாக்கத்தால் ஐரோப்பிய கிளப்புகள் தான் பெரும் இழப்பை சந்தித்து இருக்கின்றன. மேற்கண்ட தகவலை சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) கொரோனா நிவாரண திட்டத்திற்கான கமிட்டியின் சேர்மன் ஆலி ரென் தெரிவித்தார்.


Next Story