கால்பந்து

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி தள்ளிவைப்பு? + "||" + Junior Women's World Cup football match postponed?

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி தள்ளிவைப்பு?

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி தள்ளிவைப்பு?
17 வயதுக்கு உட்பட்ட (ஜூனியர்) பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நவம்பர் 2-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்க இருந்தது.
புதுடெல்லி,

17 வயதுக்கு உட்பட்ட (ஜூனியர்) பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நவம்பர் 2-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்க இருந்தது.

கொரோனா பிரச்சினை காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 17-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால் வெளிநாடுகளில் நடக்க இருந்த இதற்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் இந்த போட்டி மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.