கால்பந்து

சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு குர்பிரீத்சிங் சந்துவும், சஞ்சுவும் தேர்வு + "||" + Gurpreet Singh Chandu and Sanju were selected for the Best Footballer Award

சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு குர்பிரீத்சிங் சந்துவும், சஞ்சுவும் தேர்வு

சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு குர்பிரீத்சிங் சந்துவும், சஞ்சுவும் தேர்வு
சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு குர்பிரீத்சிங் சந்துவும், சஞ்சுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு இந்திய அணியின் கோல்கீப்பர் குர்பிரீத்சிங் சந்துவும், சிறந்த வீராங்கனை விருதுக்கு சஞ்சுவும் இந்திய கால்பந்து சம்மேளனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் சிறந்த வீரர் விருதுக்கு அனிருத் தபாவும், வளர்ந்து வரும் சிறந்த வீராங்கனை விருதுக்கு ரதன்பாலா தேவியும் தேர்வாகி உள்ளனர். சிறந்த நடுவராக அஜித் குமாரும் (மணிப்பூர்), சிறந்த உதவி நடுவராக பி.வைரமுத்துவும் (தமிழ்நாடு) தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.