கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் தஜிகிஸ்தான் வீரர் ஒப்பந்தம் + "||" + ISL Football: Tajikistan player signed for Chennai team

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் தஜிகிஸ்தான் வீரர் ஒப்பந்தம்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியில் தஜிகிஸ்தான் வீரர் ஒப்பந்தம்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிக்கான சென்னை அணியில் தஜிகிஸ்தான் வீரர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) தொடங்கி நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, தஜிகிஸ்தான் வீரர் 30 வயதான பதுலோ பதுல்லோவை இந்த சீசனுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. தஜிகிஸ்தான் அணிக்காக 68 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் இந்தியாவில் நடைபெறும் தொழில்முறை போட்டியில் பங்கேற்க இருப்பது இதுவே முதல்முறையாகும். சென்னையின் எப்.சி. அணிக்காக விளையாட இருப்பது குறித்து பதுலோ கருத்து தெரிவிக்கையில், ‘சென்னையின் எப்.சி. அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது என்றதும் யோசிக்காமல் ஒப்பந்தம் செய்து விட்டேன். சக வீரர்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன். சென்னையின் எப்.சி. அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-பெங்கால் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி 3-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தி அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், மும்பை-ஐதராபாத் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் டிரா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-ஒடிசா ஆட்டம் டிராவில் முடிந்தது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால்-கோவா ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஈஸ்ட் பெங்கால்-கோவா அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.