ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி அட்டவணை வெளியீடு தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளா மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி அட்டவணை வெளியீடு தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா-கேரளா மோதல்
x
தினத்தந்தி 30 Oct 2020 11:28 PM GMT (Updated: 30 Oct 2020 11:28 PM GMT)

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஏறக்குறைய 6 மாதங்கள் நடக்கிறது.

கோவா,

அங்குள்ள 3 ஸ்டேடியங்களில் நடக்கும் இந்த போட்டியில் கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. 11 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான முதற்கட்ட போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி நவ.20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான் அணி (கொல்கத்தா), கேரளா பிளாஸ்டர்சை (இரவு 7.30 மணி) சந்திக்கிறது. உள்ளூர் அணியான எப்.சி. கோவா முதல் சவாலை முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யுடன் (நவ.22) தொடங்குகிறது. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக்கில் ஜாம்ஷெட்பூர் அணியுடன் நவ.24-ந்தேதி மோதுகிறது. தற்போது ஜனவரி 11-ந்தேதி வரையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. மீதமுள்ள அட்டவணை பிறகு அறிவிக்கப்படும்.

இந்த போட்டிக்கான வீரர்கள், பயிற்சியாளர், உதவியாளர்கள் அனைவரும் கோவாவில் தனித்தனி ஓட்டல்களில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தங்குகிறார்கள்.

Next Story