கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: Chennai-Kerala match 'draw'

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் ‘டிரா’
சென்னை-கேரளா அணிகள் இடையிலான 11-வது லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.
கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்சை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கோல் அடிக்க கிட்டிய பொன்னான பெனால்டி வாய்ப்பை சென்னை அணி கோட்டை விட்டது. 74-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் சென்னை வீரர் ஜகுப் சைல்வெஸ்டர் உதைத்த பந்தை கேரளா கோல் கீப்பர் அல்பினோ கோம்ஸ் பாய்ந்து தடுத்து நிறுத்தினார். முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.

முன்னதாக நடந்த ஜாம்ஷெட்பூர் எப்.சி.-ஒடிசா எப்.சி. இடையிலான ஆட்டமும் டிராவில் (2-2) முடிந்தது. இதில் ஒரு கட்டத்தில் 0-2 என்ற கணக்கில் ஒடிசா பின்தங்கிய நிலையில் டிகோ மவுரிசியோ இரண்டு கோல்கள் அடித்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)- எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பையை ஜாம்ஷெட்பூர் வீழ்த்தியது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணி 9-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி 9-வது வெற்றியை பெற்றது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 10-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி 10-வது வெற்றி பெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியின் சாதனை நழுவியது
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 76-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டிடம் (கவுகாத்தி) அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கடைசி நிமிட கோலால் கேரளா வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 65-வது லீக் ஆட்டத்தில் கேரளா அணி வெற்றி பெற்றது.