கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி பெறுமா? கோவாவுடன் இன்று மோதல் + "||" + ISL Football Will Chennai team win for the 2nd time? Conflict with Goa today

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி பெறுமா? கோவாவுடன் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி பெறுமா? கோவாவுடன் இன்று மோதல்
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
கோவா, 

இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை எதிர்கொள்கிறது. சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது. அதன் பிறகு 2 டிரா, 2 தோல்வியை தழுவியுள்ளது. சரிவில் இருந்து மீண்டு சென்னை அணி 2-வது வெற்றியை ருசிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கோவா 9 முறையும், சென்னை அணி 7 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி முதல்முறையாக ‘சாம்பியன்’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகானை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: முதலாவது அரைஇறுதியில் கோவா-மும்பை அணிகள் இன்று மோதல்
கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை பந்தாடியது மும்பை
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மும்பை சிட்டி அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் “ டிரா”
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் டிராவானது.