கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 3-வது வெற்றி பெறுமா? ஈஸ்ட் பெங்காலை இன்று சந்திக்கிறது + "||" + ISL Football: Chennai team Will the 3rd win? East Bengal meets today

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 3-வது வெற்றி பெறுமா? ஈஸ்ட் பெங்காலை இன்று சந்திக்கிறது

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 3-வது வெற்றி பெறுமா? ஈஸ்ட் பெங்காலை இன்று சந்திக்கிறது
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி 3-வது வெற்றி பெறுமா? ஈஸ்ட் பெங்காலை இன்று சந்திக்கிறது.
கோவா, 

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி போட்டியில் கடந்த இரு தினங்கள் ஓய்வாகும். இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, புதுமுக அணியான ஈஸ்ட் பெங்காலை எதிர்கொள்கிறது. சென்னை அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி, 2 டிரா என்று 8 புள்ளியுடன் 8-வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆட்டத்தில் எப்.சி.கோவாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்திய சென்னை அணி இந்த ஆட்டத்திலும் வாகை சூடினால் புள்ளி பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத ஈஸ்ட் பெங்கால் அணி 2 டிரா, 4 தோல்வி என்று 2 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. கேரளா பிளாஸ்டர்சுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் ஒரு கோல் விட்டுக்கொடுத்ததால் பெங்கால் அணியால் வெற்றி பெற முடியாமல் போனது. அந்த தவறை திருத்திக்கொண்டு இன்றைய ஆட்டத்தில் முதலாவது வெற்றிக்காக வரிந்து கட்டுவார்கள். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த மோதலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.