கால்பந்து

கொரோனா வைரஸ் தொற்றால் மான்செஸ்டர் சிட்டி- எவர்டன் போட்டி ஒத்திவைப்பு + "||" + Manchester City-Everton match postponed due to corona virus infection

கொரோனா வைரஸ் தொற்றால் மான்செஸ்டர் சிட்டி- எவர்டன் போட்டி ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் மான்செஸ்டர் சிட்டி- எவர்டன் போட்டி ஒத்திவைப்பு
இங்கிலாந்தில் உருமாறிய புதுவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மான்செஸ்டர் சிட்டி - எவர்டன் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் உள்பட ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் ஓரளவிற்கு கொரோனா கட்டுக்குள் கொண்டு வந்தபின் ஜூன் மாதங்களில் இருந்து ரசிகர்கள் இன்றி போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டன.

அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களை அனுமதித்தனர். இந்த நிலையில்தான் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உருமாறி புதுவகை கொரோனா வைரஸ் தொற்றாக பரவுவதை கண்டுபிடித்தனர். இந்த வைரஸ் மிக்தீவிர வேகத்தில் பரவி வருகிறது.

ஆகையால் இங்கிலாந்தில் மீண்டும் லாக்டவுட் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி - எவர்டன் அணிகள் மோத இருந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.