கால்பந்து

லா லிகா கால்பந்து: அட்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி + "||" + La Liga football Atletico Madrid wins

லா லிகா கால்பந்து: அட்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி

லா லிகா கால்பந்து: அட்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி
நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது
மாட்ரிட், 

பிரபலமான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது. வெற்றிக்குரிய கோலை 20-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் அடித்தார். நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்- எல்ச்சி அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. புள்ளி பட்டியலில் அட்லெட்டிகோ மாட்ரிட் 35 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல்மாட்ரிட் 33 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. லா லிகா கால்பந்து: அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கியது
லா லிகா கால்பந்து போட்டியில் 25-வது வெற்றியை ருசித்த அட்லெடிகோ மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை நெருங்கியது.
2. லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி அபார வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றிபெற்றது.