கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 6-வது வெற்றி + "||" + ISL Football Mumbai team 6th win

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 6-வது வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 6-வது வெற்றி
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
கோவா, 

நேற்றிரவு அரங்கேறிய 44-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மும்பை அணி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளாவை தோற்கடித்தது. 3-வது நிமிடத்தில் ஆடம் லீ பான்ட்ரே பெனால்டி வாய்ப்பிலும், 11-வது நிமிடத்தில் ஹூகோ பவுமோசும் கோல் அடித்தனர். இதுவரை 8 ஆட்டத்தில் ஆடியுள்ள மும்பை அணி 6 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 19 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. கேரள அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய லீக் ஆட்டங்களில் ஈஸ்ட் பெங்கால்-ஒடிசா எப்.சி. (மாலை 5 மணி), ஏ.டி.கே. மோகன் பகான்- நார்த் ஈஸ்ட் யுனைடெட் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி முதல்முறையாக ‘சாம்பியன்’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகானை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஏ.டி.கே. மோகன் பகான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: முதலாவது அரைஇறுதியில் கோவா-மும்பை அணிகள் இன்று மோதல்
கோவாவில் நடந்து வரும் 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை பந்தாடியது மும்பை
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மும்பை சிட்டி அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை பந்தாடியது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் “ டிரா”
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் டிராவானது.