ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியிடம் சென்னை தோல்வி


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியிடம் சென்னை தோல்வி
x
தினத்தந்தி 4 Jan 2021 9:56 PM GMT (Updated: 4 Jan 2021 9:56 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியிடம் சென்னை அணி தோல்வியடைந்தது.

கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி.யை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத் தில் ஐதராபாத் அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது. 9-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு-மும்பை அணிகள் சந்திக்கின்றன.

Next Story