ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 7-வது வெற்றி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 Jan 2021 10:47 PM GMT (Updated: 5 Jan 2021 10:47 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.

கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி. 3-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தியது. 

மும்பை அணியில் முர்தடா பால் 9-வது நிமிடத்திலும், பிபின்சிங் 15-வது நிமிடத்திலும், ஒபிசே 84-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 9-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 7-வது வெற்றியை பெற்றதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. 

பெங்களூரு அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-கோவா அணிகள் சந்திக்கின்றன.

Next Story