கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால்-கோவா ஆட்டம் ‘டிரா’ + "||" + ISL Football: East Bengal-Goa Match draw

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால்-கோவா ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால்-கோவா ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஈஸ்ட் பெங்கால்-கோவா அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.
கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 49-வது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 56-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி வீரர் டேனியல் போக்ஸ் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 

இதனால் அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடியது. 79-வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி கோல் அடித்தது. அந்த அணியின் பிரைட் நோபாக்ஹரே மின்னல் வேகத்தில் பந்தை கடத்தி சென்று கோல் கீப்பர் உள்பட 5 வீரர்களை லாவகமாக ஏமாற்றி பந்தை அற்புதமாக கோல் வளையத்துக்குள் திணித்தார். ஆனால் இந்த மகிழ்ச்சியை அந்த அணியால் முழுமையாக கூட கொண்டாட முடியவில்லை. அடுத்த நிமிடத்தில் கோவா வீரர் தேவேந்திர முர்கான்கர் தலையால் முட்டி கோல் அடித்தார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஒடிசா அணிகள் சந்திக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் “ டிரா”
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் டிராவானது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பையை ஜாம்ஷெட்பூர் வீழ்த்தியது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணி 9-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி 9-வது வெற்றியை பெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 10-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி 10-வது வெற்றி பெற்றது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியின் சாதனை நழுவியது
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 76-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டிடம் (கவுகாத்தி) அதிர்ச்சி தோல்வி அடைந்தது.