கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா அணி முதல் வெற்றி + "||" + ISL Football: Odisha team wins first

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா அணி முதல் வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா அணி முதல் வெற்றி
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடந்து வருகிறது.
கோவா,

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஒடிசா எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தியது. ஒடிசா அணிக்கு முதல் கோல் சுய கோலாக 22-வது நிமிடத்தில் வந்தது. ஸ்டீவன் டெய்லர் 42-வது நிமிடத்திலும், டிகோ மவுரிசியோ 50-வது மற்றும் 60-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தரப்பில் ஜோர்டான் முர்ரே 7-வது நிமிடத்திலும், கேரி ஹூபெர் 79-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். 9-வது ஆட்டத்தில் ஆடிய ஒடிசா அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும். கேரளா அணிக்கு இது 5-வது தோல்வியாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-ஐதராபாத் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.