ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஐதராபாத் அணி 4-வது வெற்றி


ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஐதராபாத் அணி 4-வது வெற்றி
x
தினத்தந்தி 8 Jan 2021 11:43 PM GMT (Updated: 8 Jan 2021 11:43 PM GMT)

ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணி 4-வது வெற்றி பெற்றுள்ளது.

கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 51-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 4-2 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தியது. 

ஐதராபாத் அணியில் அரிடானே சந்தனா 3-வது நிமிடத்திலும், ஜோயல் சியான்சி 35-வது நிமிடத்திலும், லிஸ்டன் கோலாகோ 85-வது மற்றும் 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 10-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். கவுகாத்தி அணி சந்தித்த 3-வது தோல்வியாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி, ஈஸ்ட் பெங்காலை எதிர்கொள்கிறது.

Next Story